Showing posts with label Kolam. Show all posts
Showing posts with label Kolam. Show all posts

Kolam 30 - எங்கும் திருவருள் பெற்று


அதிரும் அலைகடலோசை
எங்கும் அலற
அந்தரத்தமரர்கள், இந்திரன்,இராக்கதரும்
களைப்படைய
கூர்மமாய் மந்தார மலை தாங்கி
பாற்கடல் கடைந்து
மாதவனாய்,கேசவனாய்
ஓங்கி நின்ற அம்மானே!

முன் கண்ணனாய் அவதரித்து
இக்கலியுகமும் அர்ச்சையாய்
வந்திறங்கிய
அரங்கதரவிணனை
அம்மா!

கோதையை ஆண்டாளாக
ஆட்கொண்டு உயர்வித்த
அரங்கா!

கோதை காட்டிய பாதையில்
முப்பதும் கற்பவற்கு
எங்கும் என்றும்
திருவருள் பெற்று
இன்புற அடியோமும்
நின் தாளினை படிந்தோம்
இம் மார்கழியில்



கோதாம் அநந்ய சரணம்





Kolam 29 - பொற்றாமரையடியில் உற்றோமேயாவோம்


சிற்றம் சிறு காலைப் பொழுதில்அரு துயர் நீக்கும்
நின் பாத கமலங்களை அணுகி
இற்றைப் பறை கொள்ள
வந்து வந்து ஈண்டினோம்.

கோவிந்தா !
எம் மற்றை காமங்களை அகற்றி
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உமக்கே ஆட்செய்வோம்
என்னும் அடியோங்களை
ஆள்படுத்தி அருள்வாயாக!



Kolam 28 - புண்ணியம் யாமுடையோம்


பசும் பொழில் கமுகின்
மடலிடை கீறி
ஆயர் குல வேந்தே !
நின் வேய்ங்குழல் ஓசை
திசை பரந்தன

கறவைகள் பின் செல்வோம்
அறிவும் ஒன்றும் இல்லை
மற்றொன்றும் அறியாத
ஆய்ச்சியர் நாங்கள்

கபிலை கண்டெழுந்த
குறையொன்றும் இல்லாத கோவிந்தா!
குற்றம் காணாமல்
எம் குறைகளையும் பொறுத்து
குழல் இனிமையுடன்
பறை தாராயோ?





Kolam 27 - கூடி இருந்து குளிர்ந்து


அளியன் என்று எம்மையும்
ஆட்கொண்டு
நப்பின்னையுடன் சேர்ந்து
அருளிச் செய்யும் நின்
அன்பினை என் சொல்வேன்?


இக்கூடாரை வல்லி நன்னாளில்
எல்லோரும் கூடினோம்


நீ உடுத்துக்களைந்த
ஆடையும் , ஆபரணமும் சாற்றி
அரு சுவை உணவும் பரிமாறி
நின்னடியே எமக்கு புகல்
என்று குளிர்ந்தோம்


கோதாம் அநந்ய சரணம்








Kolam 26 - ஆலினிலையாய் , மாலே, மணிவண்ணா

அதிரும் முரசினொலி

அலைகடல் போன்றுளது
ஆலினிலையாய் !

பாலன்ன வண்ணத்துன்
பாஞ்சஜன்யத்தின் ஒலி
ஞாலதைல்லாம் நடுங்க வைக்கிறது

இவையொத்த பல
சங்கும்,சக்கரமும்,பறையும்
கோல விளக்கும்,கொடியும்
விதானமும் எமக்குத் தந்து

மாலே நீல மணிவண்ணா !
மார்கழி நீராட்டத்தை
நிறைவேற்றுவாயோ?

கோதாம் அனன்ய சரணம்





Kolam 25 - வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து



பிறந்தான், வளர்ந்தான், அருளினான்
கிடந்தான், நின்றான், நடந்தான்

வடமதுரையில் ஓரிரவில் அவதரித்து
வ்ருந்தாவனத்தில் தளிர் பருவம் கழித்து
கம்சனாதியனரை கொன்று
இன்றும் எம் மனத்தில்
பள்ளிகொண்ட அரங்கத்து அம்மானே !


அடி இணை பணிந்து
நின் அருள் நின்னிடதிலிருந்து பெற்று
வருத்தம் தீர்ந்து மகிழ வந்தோம்




Kolam 24 - போற்றி




உலகமளன்தானை
வரி சிலை வானவர் ஏறனை
சகடம் உதைத்தானை
கன்று எரிந்து
விளாம் பழமும் வீழத்தியவனை
மலையை குடையாய் விரித்தானை
வேலும் ஏந்துபவனை

இவ்வறு வகை போற்றுதலும்
போறாது என்று அறிந்தோம்
நிலையாக நின் சேவகம்
எப்பொழுதும் செய்விக்க
அடியோங்களை
அளியன் என்றருளி
ஆள்படுத்தாயோ ?





Kolam 23 - பூவை பூ வண்ணா


உறக்கம் விட்டொழித்தது
இரு சிறகு உதறி அன்னம்
பேருறக்கம் ஒழித்தோம்
நாமும் பாவை நோன்பிற்காக

உறங்கும் சீரிய சிங்கம் போல்
வேரி மயிர் உதறி,அறிவுற்று, விழித்து
நின் விழி நோக்கி ஏங்கும்

எம் உள்ளத்தை
அமர்ந்து ஆராய
அரு வரைய கோயிலினின்று
பூப்போன்று வாராயோ?




Kolam 22 - செங்கண் சிறுச்சிறிதே

அரசர்கள் வந்து வந்து


எதிர் திசை நிறைந்தனர்
அவர் போல்
அபிமானம் ஒழிந்து
அடியிணை பணிந்தோம்

அயோத்தி எம் அரசே!

அங்கண் சிறுச்சிறிதே
மலரும் தாமரைபோல்
அலுங்காமல் திறந்து
எம்மேல் விழியாவோ?



Kolam 21 - மாற்றாதே பால் சொரியும் வள்ளல்

ஒளி திகழ் திருச்சுடரே!

அடு திறல் அரசே!

ஆற்றாது வந்து
உன் அடி இணை பணிந்தோம்
போற்றினோம் துதித்தோம்
உன் வாசல் கண்

பக்தவத்சலா !
நின் திருக்கண் திறவாயோ?

கோதாம் அநந்ய சரணம்




Kolam 20 - உக்கமும் தட்டொளியும் தந்து




முதலையின் வெள் எயிறு உற
யானையையும் ஆச்ரயித்தவனே !
மாமுனியின் வேள்வியை
காத்தவனே !

விமலனே !


நப்பின்னை தந்திடும்
உக்கம் குளிர்விக்க
கபிலை, ஒன் கண்ணாடியும்
கண்டு

முப்பது முக்கோடியினரை
ஒப்ப
அடியோங்களையும்
நீராட்ட மாட்டாயோ ?

கோதாம் அநந்ய சரணம்



Kolam 19 - துயில் எழுந்து வாய் திறவாய்



புறத்தில்
கதிரவன்
கனம் இருள் அகற்றியாயிற்று

அகத்தில் நின் மாடத்தின்
குத்து விளக்குகள்
இருள் மங்கச் செய்தது

அலர் பூங்குழலாய் !

எம் மன இருளை அகற்றி
ஒளி விளக்கு ஏற்றச் செய்ய
மலர் மார்பனை, உன் மணாளனை
வாய் திறக்கவும் விடுவாயோ?
கோதாம் அநந்ய சரணம்






Kolam 18 - தாள் திறவாய்



கொழி கொடி பந்தல்
கொழு மலர்
அணைத்தது
குயிலினங்கள் கூவ
கோழியும்
அழைத்தன

கரி குழல்
கந்தம் கமழும்
நப்பின்னாய் !

கண்ணனை நாங்கள் பாட
கதவைத் திறப்பாயோ ?


கோதாம் அநந்ய சரணம்





Kolam 17 - அம்பரம் ஊடு அறுத்து


அம்பரத்தில் இருள் அகன்றது
அம்பரமும் பாரும்
அவகாசமில்லா நின்றது

அம்பரமும்,அருநீரும்,அன்னமும்
அறம் செய்யும்
ஆச்சார்யனுக்கும், அசோதைக்கும்
அடி பணியும் பலதேவனுடனும்

அகலகில்லா தொடர்பு கொண்ட
அம்பரம் ஊடு அறுத்த
அரங்கா!

ஆயர்பாடி ஆய்ச்சியாகி
அணுகினோம் உன்னை
ஆசையுடன்.
கோதாம் அநந்ய சரணம்






Kolam 16 - தோரண வாசல்


வானவர் அரசர்கள்
வந்து வந்து நிறைந்தனர்
இரு களிறு ஈட்டமும்
இவரொடும் புகுந்தன
மயிலினன் அறுமுகன்
மருதரும் வசுக்களும்
வாசலில் ஈண்டினர்
தூயோமாய் நாமும் வந்தோம்
தோரண வாசல் காப்பானே
நேச நிலைக்கதவம்
நீக்கவும் வேண்டினோம்

கோதாம் அநந்ய சரணம்















Kolam 15 - கட்டுரைகளை மாற்ற வல்லானை

அனுங்கி அழுங்கிய
ஆனையின் அரு துயரும் தன்
ஆழியால் கெடுப்பான்

வருத்தும்
வல் ஆனையையும்
வலம்புரி மாயவன்
வென்றொழிப்பான்

அத்தகைய
வல்லானை மாயனை
வல்லையே, இளங்கிளியே
வாய் மொழிந்து
வாழ்த்த மாட்டாயோ?

கோதாம் அநந்ய சரணம்

Kolam 14 - சங்கொடு சக்கரம்

ஆம்பலோ கூம்பின
கொழு கொடி முல்லையும்
கொழு மலர் அணவி
கூர்ந்தது
செங்கழு நீரோ
வாய் நெகிழ்ந்தது
இரவியர்,இறையவர்,இந்திரன்
அரு தவ முனிவர் போல்
அருவரை அனைய கோயில் முன்னின்று
சங்கொடு சக்கரம் ஏந்தும்
பங்கயக்கன்ணனை
பாடவும் வாராயோ?

கோதாம் அநந்ய சரணம்

Kolam 13 - கள்ளம் தவிர்ந்து ,எழுந்து, கலந்து

ஈன் பனி நனைந்த அன்னம்
தம் இரு சிறகு உதறி

எழுந்ததைக் காண்பாயோ ?

புள்ளின் வாய் கீண்டானைப் பற்றி
களம் புக்கிய பாவைகள்
பாடுவதைக் கேட்பாயோ ?

இவர்களுடனும் சேர்ந்து

கிருஷ்ணனுடனும் கூட
எம்முடன்
நீயும் வாராயோ ?
கோதாம் அநந்ய சரணம்


Kolam 12 - தென் இலங்கை செற்றானை

பனி விழுகிறது
பால் சொரிகிறது
பேர் உறக்கம் தொலைத்து

பிராட்டியை பிரிந்து
வாடிய
வரிசிலை வானவர் ஏறனை
மனதுக்கினியானை

பாட வாராயோ?

கோதாம் அநந்ய சரணம்

Kolam 11 - பொற்கொடியே புனமயிலே

குற்றமொன்றில்லாத
பொற்கொடியே
முற்றம் புகுந்து
ஏதமில் தண்ணுமை
கொண்டு பாடியும்

குறையொன்றுமில்லாத
முகில் வண்ணனைப்
பாடாமல் உறங்குவதேனோ
கோதாம் அநந்ய சரணம்